காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் வாய்க்காலுக்கு வராததால் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நாகுடி வாய்க்காலுக்கு வராததால் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் அரசியல் கட்சியினரும் பங்கேற்றனர்.
அறந்தாங்கி,
கர்நாடகாவில் பெய்த தொடர் மழையின் காரணமாக காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்து மேட்டூர் அணை நிரம்பியது. இதனையடுத்து மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக கடந்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர் புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மேற்பனைக்காடு பகுதிக்கு கடந்த மாதம் 26-ந் தேதி வந்தடைந்தது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கல்விராயன்பேட்டைக்கு வந்த போது அப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டதால் காவிரி நீர் திருப்பி விடப்பட்டு உடைப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைக்கும் பணி நடைபெற்றது. அன்று முதல் புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பகுதியான நாகுடி தலைப்பு வாய்க்காலுக்கு வரவேண்டிய 300 கன அடி தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பகுதி விவசாயிகள், அரசுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் அறந்தாங்கி அருகே நாகுடியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 27,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த தண்ணீரை 16 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு நேரடியாகவும், 162 கண்மாய்கள் மூலம் தேக்கி வைத்தும் விவசாய பணிகள் மேற்கொள்ளப்படும். நாகுடி தலைப்பு வாய்க்காலில் 300 கன அடி தண்ணீர் வந்தால் மட்டுமே புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பகுதியில் உள்ள அனைத்து வாய்க்கால்களுக்கும் தண்ணீர் சென்று சேரும். ஆனால் தற்போது 100 கன அடி தண்ணீர் கூட வரவில்லை.
எனவே புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பகுதியான நாகுடி தலைப்பு வாய்க்காலில் 300 கன அடி தண்ணீர் வரும் வரை பேராட்டம் தொடரும் என்றார். இதில் திருமயம் தொகுதி எம்.எல்.ஏ. ரகுபதி, அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. ரெத்தினசபாபதி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் ராஜசேகர், விவசாய சங்க மாநில துணை செயலாளர் பொன்னுசாமி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன், பாரதீய ஜனதா கட்சி மாவட்ட துணை செயலாளர் கவிதா ஸ்ரீகாந்த், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

Related Tags :
Next Story