நடப்பு ஆண்டில் மட்டும் மரத்வாடாவில் 574 விவசாயிகள் தற்கொலை


நடப்பு ஆண்டில் மட்டும் மரத்வாடாவில் 574 விவசாயிகள் தற்கொலை
x
தினத்தந்தி 23 Aug 2018 4:06 AM IST (Updated: 23 Aug 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

மரத்வாடா மண்டலத்தில் விவசாயிகள் தற்கொலை தொடர்கதையாக இருந்து வருகிறது.

அவுரங்காபாத்,

கடன் தொல்லை, மழை பொழிவின்மை, பயிர்களில் பூச்சி தாக்குதல், நிலத்தின் மலட்டுத்தன்மை என்று ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு பிரச்சினைகளுக்கு உள்ளாகும் விவசாயிகள், தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் விபரீத எண்ணத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

மரத்வாடா மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 19-ந் தேதி வரை 574 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகபட்சமாக இந்த மண்டலத்தில் உள்ள பீட் மாவட்டத்தில் 115 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்கொலை செய்துகொண்ட 574 விவசாயிகளில் 345 பேருக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ரூ. 3 கோடியே 33 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story