தஞ்சை ரெயில் நிலைய வளாகத்தில் பஸ் நிறுத்துவதற்கு ரூ.500 கட்டணம் வாகனஓட்டிகள், பயணிகள் அதிர்ச்சி
தஞ்சை ரெயில் நிலைய வளாகத்தில் பஸ் நிறுத்துவதற்கு கட்டணம் ரூ.500 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை ரெயில் நிலையம் மிகவும் பழமைவாய்ந்த ரெயில் நிலையம் ஆகும். முன்பு தஞ்சை வழித்தடம் தான் முக்கிய வழித்தடமாக இயங்கி வந்தது. இந்த வழியாகத்தான் தென்மாவட்டங்களுக்கும், சென்னை போன்ற பெருநகரங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டன. நாளடைவில் விழுப்புரம்– திருச்சி இடையே ரெயில்பாதை அமைக்கப்பட்ட பின்னர் தற்போது பெரும்பாலான ரெயில்கள் அந்த வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் தஞ்சை வழியாகவும், தஞ்சையில் இருந்தும் சென்னை, கோவை, காரைக்கால், வேளாங்கண்ணி, திருச்செந்தூர், புதுச்சேரி, கன்னியாகுமரி, திருப்பதி, ராமேஸ்வரம், வாரணாசி, காரைக்கால், பைசாபாத், திருநெல்வேலி, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தஞ்சை வழியாக 15–க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 20–க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் டெல்டா பகுதியில் பல்வேறு சுற்றுலா தலங்கள், புகழ்பெற்ற கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், நாகூர் தர்கா உள்ளிட்டவை இந்த பகுதியில் இருப்பதால் தஞ்சை மற்றும் தஞ்சை வழியாக செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
தஞ்சை ரெயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் எப்போதுமே அதிக அளவில் காணப்படும். மேலும் தஞ்சை ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து நடைமேடைகளிலும் பயணிகளுக்கு இருக்கைகள், குடிநீர்வசதி, கழிவறை வசதி, பயணிகளுக்கான ஓய்வுஅறைகள் போன்றவை செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இது தவிர தற்போது 1–வது நடைமேடையில் இருந்து 2, 3–வது நடைமேடைகளுக்கு செல்வதற்கு வசதியாக நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
தஞ்சை ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இடங்களில் இருக்கை வசதிகளும், இலவச வைபை வசதியும் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரெயில் நிலையத்துக்கு கார் மற்றும் வேன், பஸ்கள் போன்றவற்றில் வரும் பயணிகளுக்கு அதிர்ச்சி ஏற்படும் வகையில் ரெயில்வே நிர்வாகம் கட்டணத்தை அறிவித்துள்ளது.
தஞ்சை ரெயில் நிலைய வளாகத்திற்கு கார், வாகனங்கள் வந்து செல்வதற்கும், வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்துவதற்கான கட்டணத்தை அறிவித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு கட்டணங்கள் எதுவும் இல்லை. 4 சக்கர வாகனங்களுக்கு 2 மணி நேரத்திற்கு ரூ,20–ம், 2 மணி முதல் 4 மணி நேரத்திற்கு ரூ.40–ம், 4 மணி நேரம் முதல் 12 மணி நேரத்திற்கு ரூ.60–ம், 12 மணி நேரத்திற்கு மேல் 24 மணி நேரம் வரை ரூ.80–ம் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் ஓரளவு அதிகமாக இருந்தாலும் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை.
ஆனால் பஸ், மற்றும் கனரக வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டணம் தான் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் தஞ்சை ரெயில் நிலைய வளாகத்தில் வந்து செல்வதற்கும், பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதற்கு 4 மணி நேரம் வரை ரூ.200–ம், 4 மணி முதல் 12 மணி நேரம் வரை ரூ.400–ம், 12 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை ரூ.500–ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதம் உள்பட இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இது ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் வாகனஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இது குறித்து ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்க சட்ட ஆலோசகர் வக்கீல் ஜீவக்குமார் கூறுகையில், ‘‘இது போன்ற கட்டண உயர்வு அனைத்து பயணிகள் தலையில் தான் விழும். மேலும் பஸ் உள்ளே செல்வதற்கு ரூ.200 கட்டணம் வசூலித்தால் பஸ் டிரைவர்கள் சற்று தொலைவிலேயே பயணிகளை இறக்கி விடும் நிலை ஏற்படுகிறது. அதைமீறி உள்ளே சென்றால் அந்த கட்டணத்தை பயணிகளிடம் தான் வசூலிப்பார்கள். எனவே எப்படிப்பார்த்தலும் இந்த சுமை பயணிகளுக்குத்தான். மற்ற ரெயில்நிலையங்களில் வயதானவர்கள், சிறுவர்கள் செல்வதற்காக பேட்டரிகார் உள்ளது. ஆனால் தஞ்சை ரெயில் நிலையத்தில் இல்லை. இங்கு பேட்டரிகார் வசதி செய்துதர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்த கட்டணம் பொறுப்பில்லாமல் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இந்த கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’என்றார்.

Related Tags :
Next Story