பூந்தமல்லியில் டிராவல்ஸ் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.83 ஆயிரம் திருட்டு
பூந்தமல்லியில் டிராவல்ஸ் நிறுவத்தின் பூட்டை உடைத்து ரூ.83 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
பூந்தமல்லி,
பூந்தமல்லி, டிரங்க்ரோடு பகுதியில் உள்ள வணிக வளாகத்தில், சபீர் அகமது என்பவருக்கு சொந்தமான டிராவல்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இது தவிர ஜெராக்ஸ், மெடிக்கல், உள்பட சில கடைகளும் அங்கு உள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சபீர் அகமது வழக்கம் போல் டிராவல்ஸ் நிறுவனத்தை மூடிவிட்டு சென்றார்.
பின்னர் நேற்று காலை அவர் மீண்டும் நிறுவனத்தை திறக்க வந்தார். அப்போது டிராவல்ஸ் நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நிறுவனத்தில் சோதனையிட்டனர்.
அப்போது டிராவல்ஸ் நிறுவனத்தின் கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.83 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
மேலும் டிராவல்ஸ் நிறுவனத்தின் அருகில் உள்ள மேலும் 3 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதும், ஆனால் அந்த கடைகளில் பணம் ஏதும் இல்லாததால் ஏற்கனவே திருடிய ரூ.83 ஆயிரத்துடன் தப்பி சென்றதும் தெரிந்தது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story