100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
மத்தூரில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கே.பாப்பாரப்பட்டி, ராமகிருஷ்ணம்பதி ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 800-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சிலருக்கே இந்த திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். பயனாளிகளிடம் இருந்து மிரட்டி வசூல் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். ஆறுமுகம், சங்கீதா, அம்பிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் முத்து, மாதர் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் ஆஞ்சலாமேரி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் 421 பேர் தங்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சண்முகத்திடம் மனு கொடுத்தனர்.

Related Tags :
Next Story