2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை : செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு


2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை : செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 24 Aug 2018 4:46 AM IST (Updated: 24 Aug 2018 4:46 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயிலில் என்ஜினீயரிங் மாணவரை கொலை செய்த 2 வாலி பர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை,

நவிமும்பை ஐரோலியை சேர்ந்த மாணவர் துஷார் ஜாதவ் (வயது 23). ரத்னகிரியில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்வு முடிந்து விடுமுறைக்காக பன்வெலுக்கு ரெயிலில் வந்தார். பின்னர் அவர், அங்கிருந்து அதிகாலை ஐரோலிக்கு மின்சார ரெயிலில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த பெட்டியில் இருந்த 2 பேர் திடீரென துஷார் ஜாதவை பிடித்து, அவரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்தனர்.

இதையடுத்து கொள்ளையர்கள் இருவரும் கன்சோலி ரெயில் நிலையத்தில் இறங்கி தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில், என்ஜினீயரிங் மாணவரை கொலை செய்து பணத்தை கொள்ளையடித்தது மேற்கு வங்கத்தை சேர்ந்த ஜயாந்தா சோம் (வயது 25), மாதவ் சர்கார் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிவில், இருவர் மீதான கொலை மற்றும் கொள்ளை குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். 

Next Story