தங்கர் சமூகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்த முதல்-மந்திரி பட்னாவிஸ் அழைப்பு


தங்கர் சமூகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்த முதல்-மந்திரி பட்னாவிஸ் அழைப்பு
x
தினத்தந்தி 24 Aug 2018 5:29 AM IST (Updated: 24 Aug 2018 5:29 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ள நிலையில் தங்கர் சமூகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்த முதல்-மந்திரி அழைப்பு விடுத்துள்ளார்.

மும்பை,

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி மராத்தா சமுதாயத்தினர் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.

இந்த நிலையில் தங்கர் சமூகத்தினரும் தங்களை எஸ்.டி.பிரிவில் இணைக்கவேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில் கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக அந்த சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் அறிவித்து இருந்தனர்.

இதையடுத்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தங்கர் சமூக தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பு மாநில விருந்தினர் மாளிகையான சகாயத்திரியில், அடுத்த வாரம் 27-ந் தேதி நடைபெறுகிறது.

இந்த சந்திப்பின்போது தங்கர் சமூகத்தை சேர்ந்த மக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மராட்டிய மக்கள் தொகையில் 9 சதவீதம் கொண்ட தங்கர் சமூகத்தினர் தற்போது சிறப்பு பிற்படுத்தப்பட்டோர் (எஸ்.பி.சி) பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story