தி.மு.க. சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைப்பு


தி.மு.க. சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 24 Aug 2018 5:37 AM IST (Updated: 24 Aug 2018 5:37 AM IST)
t-max-icont-min-icon

கேரளா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க கடந்த சில நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பொருட்கள் திரட்டப்பட்டன.

ஈரோடு,

தி.மு.க.வின் ஈரோடு தெற்கு மாவட்டம் சார்பில் கட்சியினர் பல்வேறு இடங்களில் முகாமிட்டு பொருட்களை திரட்டி வந்தனர். இந்த பொருட்களை கேரளாவுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி ஈரோடு பெரியார்நகரில் நேற்று நடைபெற்றது. ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி பொருட்களை அனுப்பி வைத்தார். இதில் மருந்து வகைகள், ஜவுளிகள், அரிசி உள்பட மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், கொள்கை பரப்பு இணைச்செயலாளர் வி.சி.சந்திரகுமார், பொருளாளர் பி.கே.பழனிசாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.விவேக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story