சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தின் கீழ் ஜோதிடர் கைது


சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தின் கீழ் ஜோதிடர் கைது
x
தினத்தந்தி 25 Aug 2018 2:40 AM IST (Updated: 25 Aug 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜோதிடர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கும்பகோணம், 


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் தேவி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அப்பகுதியில் கடை வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது கடைக்கு 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து தன்னை ஜோதிடர் என தேவியிடம் அறிமுகம் செய்து கொண்டார். இதனால் தேவி அவரை தனது வீட்டுக்கு வந்து ஜோதிடம் பார்த்து கூறுமாறு அழைத்தார். இதனால் அந்த நபர் தேவி வீட்டுக்கு சென்று ஜோதிடம் பார்த்து கூறி விட்டு சென்றார். இந்தநிலையில் ஜோதிடர் மீண்டும் தேவியின் வீட்டுக்கு சென்று அங்கு தனியாக இருந்த தேவியின் 17 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி சென்று விட்டார். இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த தேவியிடம் அவருடைய மகள் நடந்த சம்பவம் குறித்து கூறி கதறி அழுதார்.

இது குறித்து தேவி கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தேவியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்தது கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ்(வயது35) என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சுரேசை போக் சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட ஜோதிடர் சுரேசுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story