தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தல்
தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
திருவாரூர்,
திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சங்க நிர்வாகி சுந்தரய்யா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பாலா கலந்து கொண்டு பேசினார். மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் கோசிமணி, மாநிலக்குழு உறுப்பினர் மைதிலி, மாதர் சங்க செயலாளர் சுபா, நிர்வாகி விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
திருவாரூர் விளமலில் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் கடந்த 8 ஆண்டுளாக நடைபெற்று வருகிறது. இந்த பஸ் நிலையம் பணிகளை விரைந்து முடித்து திறப்பு விழா நடத்தக்கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதன போராட்டம் நடத்துவது, தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
திருவாரூரில் போக்கு வரத்து நெரிசலை கட்டுப் படுத்த அரை வட்ட புறவழிச்சாலை பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

Related Tags :
Next Story