குடகு மழை வெள்ளத்துக்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ரூ.1 கோடி நிவாரணம்
குடகு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையால் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
ஏராளமான மக்கள் உறவுகள் மற்றும் உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் பரிதவித்து வருகிறார்கள். அந்த மக்களுக்கு மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து உணவு, உடை, மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
மேலும், முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கும் ஏராளமான மக்கள் பணம் உதவி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், குடகிற்கு சென்று மழை சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, குடகில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்களால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன் என தெரிவித்த அவர், குடகு மழை வெள்ளத்துக்கு தனது எம்.பி. நிதியில் இருந்தது. ரூ.1 கோடி நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார்.
மேலும் பாதுகாப்பு துறை சார்பில் ரூ.7 கோடியும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
Related Tags :
Next Story