புதுவை அரவிந்தர் ஆசிரம நிர்வாகிகள் மீது பாலியல் புகார்: தற்கொலை செய்தவர்களின் சகோதரி திடீர் தர்ணா
புதுவை அரவிந்தர் ஆசிரம நிர்வாகிகள் மீது பாலியல் புகார் தெரிவித்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டவர்களின் சகோதரி கவர்னர் மாளிகை முன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அப்போது போலீசாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிரசாத். இவரது மனைவி சாந்திதேவி. இவர்களது மகள்கள் அருணாஸ்ரீ, ராஜ்யஸ்ரீ, ஜெயஸ்ரீ, நிவேதிதா, ஹேமலதா. இவர்கள் அரவிந்தர் ஆசிரமத்தில் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் ஆசிரம நிர்வாகிகள் மீது இவர்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். இதையொட்டி அவர்கள் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து கடந்த 18.12.2014 அன்று காலாப்பட்டு பகுதிக்கு சென்று கடலில் குதித்து குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றனர்.
இதில் சாந்திதேவி, அருணாஸ்ரீ, ராஜ்யஸ்ரீ ஆகியோர் பரிதாபமாக செத்தனர். இவர்களுடன் கடலில் குதித்த நிவேதிதா, ஹேமலதா ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். அதன்பின் புதுவை அரசு ஆதரவுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.
இருந்தபோதிலும் ஆசிரம நிர்வாகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரம நிர்வாகிகள் மீது தெரிவித்த பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ராஜீவ்ரஞ்சன் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி., தலைமை செயலாளர் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பி இருந்தார். ஆனால் அதற்கு அவர்கள் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
அவரது அறிக்கையின்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தற்கொலை செய்து கொண்டவர்களின் சகோதரி ஹேமலதா நேற்று கவர்னர் மாளிகை எதிரே பாரதி பூங்காவில் கோரிக்கை அட்டை அணிந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் அங்கிருந்து வெளியேறிய அவர் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்த முயன்றார்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றார்கள். அதற்கு ஹேமலதா எதிர்ப்பு தெரிவித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெண் போலீஸ் ஒருவரின் கையை ஹேமலதா கடித்தார். இதையொட்டி அவரை பெண் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தி பெரியகடை காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அவரிடம் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்குமார், சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது புகார் தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பின் ஹேமலதா காவல்நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். அவரது திடீர் போராட்டத்தால் கவர்னர் மாளிகை பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story