நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை,
நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சுப்பிரமணிய சுவாமி கோவில்நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆவணி தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆவணி தேரோட்ட திருவிழா கடந்த மாதம் 16–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தின் போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மேல கோவிலில் வைத்து கொடியேற்றம் நடந்தது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி– அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சப்பர வீதி உலாவும் நடந்தது. நேற்று முன்தினம் காலையில் தண்டியல் பல்லக்கில் சுவாமி வீதி உலா நடந்தது.
தேரோட்டம்விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலையில் நடந்தது. இதையொட்டி அதிகாலையில் சுவாமி– அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. காலை 7.30 மணிக்கு மேளதாளம் முழங்க தேரில் சுவாமி எழுந்தருளினார். காலை 8.15 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விரதம் இருந்த பக்தர்கள் தேருக்கு முன்னால் காவடி எடுத்து ஆடிச் சென்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் சுவாமிக்கு தீர்த்தவாரியும், சிறப்பு பூஜையும் நடக்கிறது.