திருச்சி-மும்பை விமான சேவை ரத்து: விமானநிலைய அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதம்


திருச்சி-மும்பை விமான சேவை ரத்து: விமானநிலைய அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 25 Aug 2018 10:45 PM GMT (Updated: 25 Aug 2018 7:08 PM GMT)

திருச்சியில் இருந்து மும்பைக்கு தனியார் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதியில் இருந்து நாளை (திங்கட்கிழமை) வரை சேவை கிடையாது என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

செம்பட்டு,

திருச்சியில் இருந்து மும்பைக்கு தனியார் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதியில் இருந்து நாளை (திங்கட்கிழமை) வரை சேவை கிடையாது என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு விமானம் ரத்து செய்யப்பட்டது குறித்து செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது. இதனால் முன்பதிவு செய்திருந்தவர்கள் மாற்று வழியில் பயணங்களை ஏற்பாடு செய்துகொண்டனர். இந்த நிலையில் துபாயில் இருந்து நேற்று 2 பயணிகள் திருச்சி வந்தனர். திருச்சியில் இருந்து நேற்று மும்பைக்கு விமானத்தில் செல்ல தனியார் விமானத்தில் முன்பதிவு செய்திருந்தனர். விமான சேவை ரத்து செய்யப்பட்டது குறித்து அந்த 2 பயணிகளுக்கும் தகவல் தெரியாததால் விமானநிலையத்தில் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விமான நிலைய போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமானநிலைய அதிகாரிகள் அந்த பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விமானம் ரத்து செய்யப்பட்டது குறித்து ஏற்கனவே பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது பற்றி எடுத்துக்கூறினர். இதைதொடர்ந்து மாற்று ஏற்பாட்டில் மும்பை செல்ல அந்த பயணிகள் திட்டமிட்டனர். இந்த சம்பவத்தால் விமானநிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story