திருவாரூரில் வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி


திருவாரூரில் வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 25 Aug 2018 10:45 PM GMT (Updated: 25 Aug 2018 8:00 PM GMT)

திருவாரூரில் வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

திருவாரூர்,

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி தமிழகத்தில் 6 முக்கிய இடங்களில் கரைக்கப்பட உள்ளது. இதில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ள அஸ்தி வாகனத்தின் மூலம் சென்னையில் இருந்து எடுத்து வரப்பட்டு, கும்பகோணம், குடவாசல், கொரடாச்சேரி, திருவாரூர் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு வாஜ்பாய் அஸ்தி பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பேட்டை சிவா, மாவட்ட பொதுச்செயலாளர் துரையரசு, நகர தலைவர் சங்கர், ஒன்றிய தலைவர் செந்தில் அரசன் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் சக்தி செல்வகணபதி, வீரமணி, ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக வாஜ்பாய் வாழ்க்கை வரலாறு குறித்த குறும்படம் திரையிடப்பட்டது.

அதேபோல முத்துப்பேட்டைக்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது தி.மு.க. நகர செயலாளர் கார்த்திக், அ.தி.மு.க. நகர செயலாளர் அன்பழகன், நகர இளைஞர் அணி செயலாளர் மருது.ராஜேந்திரன், சென்னை தி.நகர் தொகுதி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சரவணன், பா.ஜனதா கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் கோட்டூர் ராகவன், ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், நகர தலைவர் செம்பை கண்ணன் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கொரடாச்சேரியில் வாஜ்பாயின் அஸ்தி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதில் பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை தொடர்ந்து கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகே வாஜ்பாயின் அஸ்தி வைக்கப்பட்டு அங்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், ஒன்றிய செயலாளர் பாலச்சந்தர், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாஸ்கரன், நகர செயலாளர் செந்தில், பா.ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் சிவா, நகர செயலாளர் முருகேசன் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். 

Next Story