அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திருத்துறைப்பூண்டி அருகே 6 கிராம மக்கள் சாலைமறியல்


அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திருத்துறைப்பூண்டி அருகே 6 கிராம மக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 26 Aug 2018 4:30 AM IST (Updated: 26 Aug 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திருத்துறைப்பூண்டி அருகே 6 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தபகுதியில் 1 மணிநேரம் போக்கு வரத்துபாதிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி,

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம் உள்பட 6 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கச்சனம் கடைத் தெருவில் சாலைமறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய பொருளார் பிரசாத் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வேலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகானந்தம், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் சுடுகாடு, சாலை வசதி, மின் வசதி, ஒருங்கிணைந்த சுகாதார வளாகம், குடிநீர் வசதி, குளங்களில் படிதுறை வசதி, குளங்களை தூர்வாரி ஆகாயத்தாமரையை அகற்றுதல், நீர்நிலைகளில் செல்ல கூடிய சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் திருவாரூர்-திருத் துறைப்பூண்டி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story