கும்பகோணத்தில் பிளாஸ்டிக் பொருள் குடோனில் பயங்கர தீ விபத்து ரூ.50 லட்சம் பொருட்கள் சேதம்
கும்பகோணத்தில் உள்ள பிளாஸ்டிக் பொருள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உப்புக்கார தெருவை சேர்ந்தவர் ராஜா(வயது38). இவர் அப்பகுதியில் ரெக்சின், பிளாஸ்டிக் பொருட்களை சில்லறை மற்றும் மொத்தமாக விற்பனை செய்து வருகிறார். மேலும் இந்த பொருட்களுக்கான குடோனும் அங்கேயே உள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு திடீரென குடோனின் தரைத்தளத்தில் திடீரென புகை வந்தது. உடனே குடோனில் வேலை பார்த்த அனைவரும் அங்கிருந்து பதறியடித்து வெளியே ஓடிவந்தனர். அப்போது தரைத்தளத்தில் பிடித்த தீ முதல் தளத்துக்கு பரவியது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கும்பகோணம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 3 வாகனங்களில் வந்த 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க தொடங்கினர்.
ஆனால் குடோன் முழுவதும் தீ பரவி ஆங்காங்கே புகை வெளிவர தொடங்கியதால் தீயணைப்பு வீரர்களின் கடுமையான முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. அதிக அளவு புகை வந்ததால் தீ பரவும் இடத்துக்கு தீயணைப்பு வீரர்களால் செல்ல முடியவில்லை. இதனால் மிகப்பெரிய அசம்பாவிதத்தை தவிர்க்க தீயணைப்பு வீரர்கள் முடிவு செய்து புகை வெளியேறும் வகையில் கட்டிடத்தை சுற்றிஉள்ள பகுதிகளை வேகமாக இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் கட்டிடத்துக்குள் நிரம்பி இருந்த புகை இடிக்கப்பட்ட பகுதி வழியாக வேகமாக வெளியேறியது. எனவே தெரு முழுவதும் புகை பரவி மக்கள் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று அங்கிருந்த நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
இரவு 8 மணிக்கு பிடித்த தீயை 12 மணி ஆன போதும் அணைக்க முடியவில்லை. மேலும் ரெக்சின் பொருட்கள் அதிக அளவில் எரிந்து கொண்டிருந்ததால் துர்நாற்றம் வீச தொடங்கியது. மேலும் கும்பகோணம் தாசில்தார் வெங்கடாசலம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து தீ அணைக்கும் பணி தொடர்ந்து விடிய விடிய நடைபெற்றது. இந்த தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

Related Tags :
Next Story