ஆதரவற்றோர் இல்லத்தில் சிறுவனை தற்கொலைக்கு தூண்டிய வாலிபர் கைது


ஆதரவற்றோர் இல்லத்தில் சிறுவனை தற்கொலைக்கு தூண்டிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Aug 2018 4:21 AM IST (Updated: 26 Aug 2018 4:21 AM IST)
t-max-icont-min-icon

பயந்தரில் ஆதரவற்றோர் இல்லத்தில் சிறுவன் தற்கொலை செய்து கொண்டான். தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தானே,

தானே மாவட்டம் பயந்தர் பகுதியில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆதரவற்றோர் இல்லத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் கடந்த 19-ந் தேதி தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் சிறுவன் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது.

இதில் ஆதரவற்றோர் இல்லத்தில் பணி புரிந்துவரும் ராகுல் ஷிண்டே(வயது 19) என்ற வாலிபர் தனக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதாகவும், தாக்குவதாகவும் இதன் காரணமாக தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதி வைத்திருந்தார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் ராகுல் ஷிண்டேவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது சிறுவனை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கைதான ராகுல் ஷிண்டே நாசிக் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். அவர் சமீபத்தில் தான் அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் வேலைக்கு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story