குஜராத் மாதிரி திட்டம் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை
குஜராத் மாதிரி திட்டம் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்து உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் உயிரிழப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதிலும் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பால்கர் மாவட்டம் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த மாவட்டத்தில் மட்டும் கடந்த 2017-18-ம் ஆண்டில் 396 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழந்து உள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி பங்கஜா முண்டே கடந்த மார்ச் மாதம் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஊட்டச்சத்து குறைபாடு உயிரிழப்பை குறைப்பதற்கு குஜராத்தில் பின்பற்றப்படும் மாதிரி திட்டத்தை மராட்டியத்திலும் கொண்டு வர போவதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பழங்குடியின மக்கள் தான்அதிகம் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழக்கின்றனர்.
பழங்குடியின வளர்ச்சி துறைக்கு ஆண்டுதோறும் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. இதில் 50 சதவீதம் பழங்குடியின மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கும், விடுதி மற்றும் உணவு கட்டண மானியத்திற்கும் வழங்கப்படுகிறது.
மீதியிருக்கும் தொகையில் அவர்களுக்கான ஆசிரம பள்ளிகள், விடுதிகள், சாலைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் இதர வசதிகளுக்கு வழங்கப்படுகிறது.
இதற்கான நிதி சம்பந்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, உணவு மற்றும் வினியோகத்துறை, சமூக நீதி, பொதுத்துறை மற்றும் பள்ளிக்கல்வி துறை போன்றவற்றிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் இந்த துறைகளை கட்டுப்படுத்தி பணிகளை முடிக்கும் அதிகாரம் பழங்குடியின வளர்ச்சி துறைக்கு இல்லை.
இதுபோன்று ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை மட்டுமே பொறுப்பு ஏற்கவேண்டி உள்ளது. மற்ற துறைகள் தங்கள் பொறுப்பை தட்டிக்கழிக்கின்றனர்.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் குஜராத் மாதிரி முறை கடைப்பிடிக்கப்பட உள்ளது.
இதன்படி முதல்-மந்திரி தலைமையில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு பல்வேறு துறைகளால் திட்டம் நடைமுறைப்படுத்துவது கண்காணிக்கப்படும்.
இதேபோல் தலைமை செயலாளர்தலைமையில் அமைக்கப்படும் மற்றொரு குழு 3 மாதத்திற்கு ஒரு முறை திட்டத்தை நடைமுறை படுத்தியதால் ஏற்பட்ட நன்மைகள், மேலும் என்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும், நிதி எவ்வளவு ஒதுக்கவேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்.
இந்த முறையின் மூலம் குஜராத்தில் அதீத வெற்றியை கண்டுள்ளனர். இதேபோல் இங்கும் ஊட்டச்சத்து குறைபாடு உயிரிழப்பை குறைக்க முடியும்.
இவ்வாறு முதல்-மந்திரிதேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

Related Tags :
Next Story