சேலத்தில், வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது


சேலத்தில், வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 27 Aug 2018 6:51 AM IST (Updated: 27 Aug 2018 6:51 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அஸ்தம்பட்டியில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சேலம்,

சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியை சேர்ந்தவர் விஜி (வயது 27). இவரை பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கடந்த மாதம் 24-ந் தேதி 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் இந்த கொலையில் ஈடுபட்ட சேலம் சின்ன முனியப்பன் கோவில் கலிங்கா சாலையை சேர்ந்த ராகுல்ராஜ் (24), குமாரசாமிபட்டியை சேர்ந்த வினோத்குமார் (23), சீரங்கன் (38), மரவனேரி காந்திநகரை சேர்ந்த ஜெயபிரகாஷ் (28), ஆத்துக்காட்டை சேர்ந்த சர்மல் (23) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து 5 பேரும் சேலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஆத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா, போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை ஆகியோர் கமிஷனர் சங்கருக்கு பரிந்துரை செய்தனர்.

இதை ஏற்று ராகுல்ராஜ், சீரங்கன் உள்ளிட்ட 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் சிறையில் உள்ள 5 பேரிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 5 பேரும், ஆத்தூர் கிளை சிறையில் இருந்து நேற்று வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Next Story