திருமணம் செய்து வைக்காததால் தந்தையை அடித்து கொன்ற தச்சுத்தொழிலாளி கைது


திருமணம் செய்து வைக்காததால் தந்தையை அடித்து கொன்ற தச்சுத்தொழிலாளி கைது
x
தினத்தந்தி 28 Aug 2018 4:30 AM IST (Updated: 28 Aug 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில், திருமணம் செய்து வைக்காததால் தந்தையை அடித்து கொன்ற தச்சுத்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி மி‌ஷன் காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் அந்தோணி பேட்ரிக்(வயது 72). இவரது மகன் நெல்சன் ரிச்சர்டு(37). தச்சுத்தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. தந்தை– மகன் 2 பேரும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி குடிபோதையில் 2 பேரும் தகராறில் ஈடுபடுவது வழக்கம் என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு தந்தை– மகன் 2 பேரும் வீட்டில் குடிபோதையில் இருந்துள்ளனர். அப்போது தனக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பாக நெல்சன் ரிச்சர்டு, தந்தையிடம் பேசியுள்ளார். அதில் 2 பேருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த நெல்சன் ரிச்சர்டு, தந்தை என்றும் பாராமல் அவரது முகத்தில் கையால் பலமாக தாக்கினார். அதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை, காலால் மிதித்துள்ளார். இதனால் படுகாயம் அடைந்த அந்தோணி பேட்ரிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கோத்தகிரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணம் செய்து வைக்காததால் தந்தையை அடித்து கொன்ற நெல்சன் ரிச்சர்டுவை கைது செய்தனர்.


Next Story