குளித்தலை காவிரி பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் இளைஞர்கள் மனு
குளித்தலை காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்றதால் அங்குள்ள பாலத்தின் தூண்களின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி அந்த பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இளைஞர்கள் மனு கொடுத்தனர்.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 356 மனுக்கள் வரப்பெற்றன. இதனை நேரடியாக பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருச்சி கோட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் கரூர் மாவட்ட இந்து முன்னணியினர் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால் சாமானிய மக்கள் ஆங்காங்கே சிலை வைத்து வழிபாடு நடத்த முடியாத சூழல் உள்ளது. மேலும் விநாயகர் சதுர்த்தி விழா சம்பந்தமாக வருவாய் கோட்டாட்சியர்- மாவட்ட கலெக்டரிம் அனுமதி வாங்க வேண்டும் என கூறுகின்றனர். எனவே சாமானிய மக்களும் விநாயகர் சதுர்த்தியை அமைதியான வழியில் பாதுகாப்போடு கொண்டாட வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கரூர் மாவட்டம் ஜெகதாபி கிராமம் சுப்புரெட்டியூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 80 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் ஊரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 3 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென அவை பழுதடைந்ததால் எங்கள் ஊரில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இதனால் மக்கள் 3 கிலோ மீட்டர் சுற்றி சென்று குடிநீர் பிடித்து வர வேண்டியிருக்கிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். இதேபோல் சின்னமநாயக்கன்பட்டி, பெருமாள்பட்டி உள்ளிட்ட பகுதி மக்களும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக மனு கொடுத்தனர்.
கரூர் மற்றும் வாங்கல் பகுதியிலுள்ள அரசு காலனியில் வசிக்கும் முஸ்லிம் பெண்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர். கிருஷ்ணராயபுரம் தாலுகா கோவக்குளம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கொடுத்த மனுவில், கரூர் மாவட்டத்தில் 3 இடங்களில் சமத்துவபுரம் கட்டப்பட்டு தந்தை பெரியார் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் பராமரிப்பின்றி உள்ளன. எனவே இதனை புனரமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். கிருஷ்ணராயபுரம் தாலுகா கோவக்குளம் கிராமத்தில் உள்ள 300 ஏக்கர் ஏரிக்கு, காவிரி ஆற்றில் இருந்து உபரிநீரை கொண்டு வந்து சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவக்குளம் விவசாயி முத்து மனு கொடுத்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் இளைஞர்கள் சிலர் அளித்த மனுவில், குளித்தலை- முசிறி இடையே அகண்ட காவிரியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குளித்தலையிலுள்ள தந்தை பெரியார் காவிரி பாலத்தில் சில நாட்களுக்கு முன்பு அதிகப்படியான தண்ணீர் சென்றதால் அங்குள்ள 20-க்கும் மேற்பட்ட தூண்களின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதனை உடனடியாக சீர் செய்து, அந்த பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் மாயனூர் தடுப்பணை பகுதிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குளித்தலை ரெயில்வே கேட் முதல் உழவர் சந்தை வரையிலான புறவழி சாலையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். குளித்தலை பஸ் நிலையத்தில் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கரூர் காந்திகிராமத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. இதன் நுழைவு வாயில் பகுதியில் சிலர் கடைகள் வைத்து ஆக்கிரமித்துள்ளனர். எனவே இது குறித்து நகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கரூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சங்க நிர்வாகிகள் கொடுத்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.
கூட்டத்தின் போது, குளித்தலை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர்களில் எதிர்பாராத விபத்துகளால் இறந்த மற்றும் படுகாயம் அடைந்த நபர்களின் குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில் 10 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை மாவட்ட வருவாய் அதிகாரி வழங்கினார். இந்த கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) சசீதர், மக்கள் குறைதீர்க்கும் தனித்துணை கலெக்டர் (பொறுப்பு) குமரேசன், வருவாய் கோட்டாட்சியர் (குளித்தலை) லியாகத், ஆதிதிராவிடர் நல அதிகாரி என்.பாலசுப்பிரமணியன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி ஜான்சி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story