7-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற ஆட்டோ டிரைவர் கைது


7-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 28 Aug 2018 3:15 AM IST (Updated: 28 Aug 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் 7-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம், 

விழுப்புரம் சாலாமேடு மின்வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு மகன் கார்த்திக் (வயது 33), ஆட்டோ டிரைவர். இவருக்கும் இவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்படவே கார்த்திக்கிடம் கோபித்துக்கொண்டு அவரது மனைவி விழுப்புரத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் மனைவியை பார்ப்பதற்காக கார்த்திக், தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். அங்கு பக்கத்து வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயதுடைய மாணவியை கார்த்திக், வீட்டிற்குள் அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

அந்த மாணவி கூச்சல் போடவே அக்கம், பக்கத்தினர் விரைந்து ஓடி வந்தனர். இவர்களை பார்த்ததும் கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இதையடுத்து பொதுமக்கள், கார்த்திக்கை மடக்கி பிடித்து விழுப்புரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். 

Next Story