எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு 147 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-
மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட். ராணுவத்திற்குத் தேவையான எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் தயாரிப்பு பணிகளை கவனிக்கும் இந்த நிறுவனத்தில் தற்போது என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 81 இடங்களும், மெக்கானிக்கல் பிரிவில் 50 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 3 இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 13 இடங்களும் உள்ளன. மொத்தம் 147 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு:
1-9-2018 அன்று 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன், டெலிகம்யூனிகேசன், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் என்ஜினீயரிங் தொழில்நுட்ப பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-8-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://bel-india.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Related Tags :
Next Story