எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 668 பணியிடங்கள்


எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 668 பணியிடங்கள்
x
தினத்தந்தி 28 Aug 2018 2:23 PM IST (Updated: 28 Aug 2018 2:23 PM IST)
t-max-icont-min-icon

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 668 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-

அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் என்று அழைக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு இடங்களில் இதன் மருத்துவ மையங்களும், கல்லூரியும் செயல்படுகிறது. தற்போது ரிஷிகேஷில் செயல்படும் எய்ம்ஸ் கிைளயில் நர்சிங் ஆபீஸர், ஆபீஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 668 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதில் அதிகபட்சமாக நர்சிங் ஆபீஸர் பணிக்கு 611 இடங்கள் உள்ளன. ஆபீஸ் அசிஸ்டன்ட், பெர்சனல் அசிஸ்டன்ட், பிரைவேட் செகரட்ரி, புரோகிராமர், ரேடியோகிராபிக் டெக்னீசியன், ரேடியோ தெரபி டெக்னீசியன், சீனியர் புரோகிராமர், டெக்னிக்கல் ஆபீசர் போன்ற பணிகளுக்கும் கணிசமான இடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

சீனியர் புரோகிராமர், டெக்னிக்கல் ஆபீசர் போன்ற பணிகளுக்கு, 40 வயதுடையவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதர பணிகளில் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. நர்சிங் ஆபீசர் பணிக்கு 21 முதல் 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

பி.எஸ்சி. நர்சிங் படித்தவர்கள், நர்சிங் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம். பி.இ., பி.டெக் படித்தவர்கள், கம்ப்யூட்டர் அப்ளிகேசன் முதுநிலை படிப்பு படித்தவர்கள், ரேடியோகிராபி டிப்ளமோ படித்தவர்கள், எம்.சி.ஏ., டி.சி.ஏ. படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. பிளஸ்-2 மற்றும் இதர பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் ஒரு சில பிரிவில் பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித் தகுதி, வயது வரம்பை இணைய தளத்தில் பார்க்கலாம்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.3000 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை


விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இன்று முதல் விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. 14-9-2018-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://aiimsrishikesh.edu.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம். 

Next Story