எல்.ஐ.சி. துணை நிதி நிறுவனத்தில் 300 பணியிடங்கள்


எல்.ஐ.சி. துணை நிதி நிறுவனத்தில் 300 பணியிடங்கள்
x
தினத்தந்தி 28 Aug 2018 2:48 PM IST (Updated: 28 Aug 2018 2:48 PM IST)
t-max-icont-min-icon

எல்.ஐ.சி.யின் துணை நிதி நிறுவனத்தில் 300 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று எல்.ஐ.சி. இதன் கீழ் செயல்படும் துணை நிதி நிறுவனம் எல்.ஐ.சி. ஹவுசிங் பினான்ஸ் லிமிடெட். தற்போது இந்த நிறுவனத்தில் உதவி மேலாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு 100 இடங்களும், அசோசியேட் பணிக்கு 50 இடங்களும், அசிஸ்டன்ட் பணிக்கு 150 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1-1-2018-ந் தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 28 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது 2-1-1990 மற்றும் 1-1-1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே.

கல்வித்தகுதி

எம்.பி.ஏ. படித்தவர்கள் மற்றும் இந்த முதுநிலைப் படிப்புடன் குறிப்பிட்ட பிரிவுகளில் டிப்ளமோ படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

கட்டணம்

விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாக கட்டணம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 6-9-2018-ந் தேதியாகும்.

இதற்கான ஆன்லைன் தேர்வு அக்டோபர் 6,7-ந் தேதிகளில் நடக்கிறது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.lichousing.com/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும். 

Next Story