தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு: பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தி.மு.க.வினர் கொண்டாட்டம்
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதையொட்டி சேலம் புறநகர் பகுதிகளில் தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
எடப்பாடி,
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எடப்பாடி நகர தி.மு.க. மற்றும் வீரபாண்டியார் நற்பணி மன்றம் சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. எடப்பாடி பஸ் நிலையம் முன்பு வீரபாண்டியார் நற்பணி மன்ற தலைவர் அறிவழகன் தலைமையில் நிர்வாகிகள் அன்பரசன், ராஜசேகர், முத்துரங்கன், அசோக்குமார், பாஸ்கர், ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
தாரமங்கலம் ஒன்றிய, நகர தி.மு.க.வினர் பேரூர் செயலாளர் குப்பு என்கிற குணசேகரன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். நிகழ்ச்சியில் எஸ்.முத்துசாமி, சேகரன், துரைசாமி, பொருளாளர் ஆறுமுகம், தொண்டர்படை ஆறுமுகம், மேஸ்திரி பாலு, சின்னப்பையன், சேட்டு, கட்டுக்கல் பழனிசாமி, பரமசிவம், சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நகரின் முக்கிய வீதி வழியாக தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.