தரைக்கடைகளை அப்புறப்படுத்த நினைப்பது சில்லறை வணிகத்தை ஒழிக்கும் முயற்சி வெள்ளையன் பேட்டி
தரைக்கடைகளை அப்புறப்படுத்த நினைப்பது சில்லறை வணிகத்தை ஒழிக்கும் முயற்சியாகும் என்று தஞ்சையில் வெள்ளையன் கூறினார்.
தஞ்சாவூர்,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு எதிரே சாலையோரம் காலம், காலமாக கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பூஜைக்குரிய பொருட்களை பக்தர்கள் வாங்கிக்கொண்டு கோவிலுக்கு செல்வதுடன் சாமி தரிசனம் முடித்து விட்டு வீட்டிற்கு செல்லும்போது அம்மன் படம், காமாட்சி விளக்கு போன்றவற்றை வாங்கி செல்வதை புனிதமாக எண்ணுவார்கள்.
இந்த கடைகள் மூலம் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வாதாரம் பெறுகின்றனர். இந்த கடைகளால் யாருக்கும் எந்த இடையூறும் கிடையாது. இவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தை கருத்தில் கொண்டு, இங்கேயும் தீ விபத்து ஏற்பட்டு விடுமோ? என்று அதிகாரிகள் கடைகளை அகற்ற நினைப்பது அராஜகமாகும்.
இதை எதிர்த்துத்தான் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள வணிகர்கள், கடைகளை அடைத்து விட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததுடன், அவர்களது வாழ்வாதாரத்தை காக்க தமிழக முதல்–அமைச்சரிடம் இந்த பிரச்சினையை எடுத்து சொல்லி தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தோம். அந்த கடைகளை அகற்ற அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டால் போராட்டம் தீவிரமாகும்.
நடைபாதை வியாபாரிகள், அரசு புறம்போக்கு இடங்களில் தரைக்கடை வைத்துள்ளவர்கள், நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் கடை வைத்துள்ளவர்களை அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது சில்லறை வணிகத்தை ஒழித்து விட்டு ஆன்லைன் பக்கம் மக்களை திரும்பும் முயற்சியாகும். சில்லறை வணிகத்தை ஒழித்து விட்டு அந்நிய முதலீட்டுக்கு உதவும் உள்நோக்கம் இருக்கிறது.
கடைகளை அகற்ற எங்கிருந்து நிர்ப்பந்தம் வந்தாலும் வணிகர்களை காக்க முதல்–அமைச்சர் முன்வர வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்த கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தே ஒரு திட்டமிட்ட சதி என்று ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தோம். நடைபாதை வணிகர்களை காக்க 2006–ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இந்த சட்டத்திற்கு விரோதமாக ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர்.
ஒட்டுமொத்தமாக பிளாஸ்டிக் பொருட்களே இல்லாத நிலையை உருவாக்கக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக ஒழித்து கட்டாமல், வரைமுறைப்படுத்த வேண்டும். அதாவது மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் வகைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மறுசுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் வகைகளுக்கு தடைவிதிக்க வேண்டும்.
ஆனால் மறுசுழற்சி மூலம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் வகைகளைத்தான் தமிழகத்தில் ஒழித்துக் கட்ட முயற்சிக்கிறார்கள். இதனால் கடலை மிட்டாய் போன்ற குடிசை தொழில்கள் பாதிக்கப்படுவதுடன், கார்ப்பரேட் கம்பெனிகளின் சாக்லெட்டுகள் விற்பனை அதிகரிக்கும்.
உள்நாட்டு தொழிலை அழித்துவிட்டு வெளிநாட்டு தொழிலுக்கு உதவும் வகையில் தான் இந்த நடவடிக்கை உள்ளது. தங்களது வாழ்வாதாரத்தை காக்க மக்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் வன்முறையாக மாறினால் அதற்கு மத்திய அரசு தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது தஞ்சை மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் சீனிவாசன், மாநில துணைச் செயலாளர் ரவி, துணை பொதுச் செயலாளர் வேதை முருகையன், மாவட்ட நிர்வாகிகள் ஜெயபால், நசீர், ராமஜெயம் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் உண்ணாவிரதம் இருந்த வணிகர்களை வெள்ளையன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதில் நிர்வாகிகள் பார்த்தசாரதி, ஆத்மநாபன், கந்தமுருகன், ஜமால்ரவி, சுந்தரமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story