முக்கொம்பு கொள்ளிடம் அணை முற்றிலும் இடிந்து விழும் அபாயம் அமைச்சர்கள், கலெக்டர் நேரில் ஆய்வு
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் மேலும் சில மதகுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அணை முற்றிலும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, கலெக்டர் ராஜாமணி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
ஜீயபுரம்,
திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி ஆறு மூலம் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வெள்ளப்பெருக்கு காலங்களில் மேலணையில் இருந்து உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம். இந்தநிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் உபரிநீர் திறக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கொள்ளிடம் அணையில் மொத்தம் 45 மதகுகள் உள்ளன. இவற்றில் 9 மதகுகள் கடந்த 22-ந் தேதி இரவு உடைந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இதையடுத்து உடைந்த பகுதியை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சீரமைப்பு பணிக்காக ரூ.95 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அணையின் முதலாவது மதகு முதல் 17-வது மதகு வரை மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 3 லட்சம் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் இரவு, பகலாக 800 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் அணையில் இடிந்த 9 மதகுகள் மட்டுமின்றி மீதமுள்ள 36 மதகுகளும் நல்ல நிலையில் உள்ளனவா? என ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்காக தண்ணீருக்கு அடியில் சென்று அணையில் மதகுகளில் விரிசல் உள்ளதா? என கண்டறிவதற்காக ஆழ்கடலில் மூழ்கி நீச்சல் பயிற்சி அனுபவம் உள்ள ஹைடெக் சிவில் என்ஜினீயர்கள் ஏஜென்சியினர் தூத்துக்குடியில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.
அவர்களுடன் இணைந்து நீச்சல் பயிற்சியாளர்கள் பாலு(வயது 56), சிவா(40), சந்தனகுமார்(40) ஆகிய 3 பேரும் முக்கொம்பு கொள்ளிடம் அணையின் கீழ் பகுதியில் தண்ணீரில் மூழ்கி ஒவ்வொரு மதகுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளிடம் அணையின் எஞ்சிய மதகுகள் சிலவற்றில் விரிசல் ஏற்பட்டு இருப்பதும், அணையின் அடித்தள பிளாட்பாரத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதனால் முக்கொம்பு கொள்ளிடம் அணை முற்றிலும் இடிந்து விழுமோ? என அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் கொள்ளிடம் அணையில் சீரமைப்பு பணிகள் பாதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர், மாவட்ட கலெக்டர் ராஜாமணி ஆகியோர் முக்கொம்பு வந்து கொள்ளிடம் அணையை ஆய்வு செய்துவிட்டு சென்றனர்.
இந்தநிலையில் நேற்று பகல் கொள்ளிடம் அணையில் மேற்கொண்டு வரும் பணிகளை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, கலெக்டர் ராஜாமணி, குமார் எம்.பி. ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொள்ளிடம் அணை பகுதியில் 3 லட்சம் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு வருகிறது. தண்ணீரின் வேகத்தை குறைக்கும் வகையில் பாறாங்கற்கள் கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டு வருகிறது. கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடும் இடத்தில் புதிதாக மணல் திட்டு உருவாகி உள்ளது. இதனால் அங்கு தண்ணீர் செல்ல முடியாதபடி சற்று மேடாக இருந்தது. பொக்லைன் எந்திரங்கள் மூலம் அந்த மணல் திட்டை அப்புறப்படுத்தி கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி மட்டுமே தண்ணீர் திறந்து விடுகிறார்கள். மாயனூர் கதவணையில் இருந்து ஏற்கனவே திறந்து விடப்பட்ட 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே தற்போது வந்து கொண்டு இருக்கிறது. நாளடைவில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறையும். இன்னும் 4 நாட்களில் இந்த பணிகள் அனைத்தும் முடிந்து விடும். தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தால் சீரமைப்பு பணியில் பாதிப்பு ஏற்படும். அப்போது வேண்டுமானால் ராணுவ உதவியை நாடலாம். ஆனால் தற்போது ராணுவ உதவி தேவைப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story