பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்வதால் வணிகர்களுக்கு பாதிப்பு: முதல்-அமைச்சரை சந்தித்து மனு அளிக்க முடிவு
பாலித்தீன் பைகளை தற்போது பறிமுதல் செய்வதால் வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இது தொடர்பாக முதல்-அமைச்சரை நாளை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார்.
கரூர்,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று கரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வால்மார்ட் நிறுவனத்தின் பல்வேறு கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நிறுவனத்தினை நாட்டில் தடை செய்யக்கோரி அடுத்த மாதம் (செப்டம்பர்) 28-ந்தேதி நாடு தழுவிய போராட்டத்தை அறிவிக்க இருக்கிறார்கள். இதையொட்டி வருகிற 4-ந்தேதி திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் வால்மார்ட்டிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
வால்மார்ட் கட்டிடத்தை சீல் வைத்த பெருமை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உண்டு. எனவே சட்டமன்றத்தில் வால்மார்ட்டை எப்போதும் தமிழகத்தில் கால்பதிக்க வைக்கமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.
அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 1-ல் இருந்து தான் பாலித்தீன் பைகளுக்கு (கேரிபேக்) தடை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் பல்வேறு மாவட்டங்களில் இப்போதே, கலெக்டர் உத்தரவின் பேரில் அரசுத்துறை அதிகாரிகள் கடைகளுக்குள் நுழைந்து பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்வதால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக நாளை (வெள்ளிக்கிழமை) தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம். பாலித்தீன் பை தடையை நாங்கள் எதிர்க்கவில்லை. அதற்கு மாற்றாக சாக்குபை, துணிப்பை உள்ளிட்டவற்றிற்கு விலையேற்றம் இல்லாமல் வரிவிலக்கு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் ரூ.50, ரூ.60 என வசூலிக்கப்பட்ட குப்பை வரி, தற்போது ரூ.500, ரூ.1,000, ரூ.3 ஆயிரம் என தன்னிச்சையாக அதிகாரிகள் வசூலிப்பது கண்டனத்துக்கு உரியது. இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாமானிய வியாபாரிகள் எப்போதும் பதுக்கலில் ஈடுபடுவது இல்லை. யார் பதுக்கக்கூடியவர்கள் என்பது மத்திய அரசுக்கு தெரியும். அவர்களும் மத்திய அரசை சார்ந்து தான் இருக்கின்றனர். ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால் அரசுக்கு வரிவருமானம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மக்களிடத்தில் பொருட் களை வாங்குகிற சக்தியை குறைத்து விட்டது. அதே வேளையில் தற்போது சிறிய கடை முதல் பெரிய நிறுவனம் வரை 40 சதவீத வியாபாரம் பாதிப்படைந்துள்ளது. இதன் மூலம் நிறைய கடைகளை வியாபாரிகள் காலி செய்வதால் கட்டிட உரிமையாளர்கள் உள்ளிட்டோரும் பாதிப்படைகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story