கரூரில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி தொடக்கம் 500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு


கரூரில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி தொடக்கம் 500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 30 Aug 2018 4:00 AM IST (Updated: 30 Aug 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இதில் 500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

கரூர்,

கரூர் மாவட்ட இறகுப்பந்து கழகம் மற்றும் கரூர் வைஸ்யா வங்கி, டி.என்.பி.எல். ஆகியவற்றின் சார்பில் கரூரில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி கரூர் ஆபிசர்ஸ் கிளப்பில் நேற்று தொடங்கியது. போட்டிக்கு மாவட்ட இறகுப்பந்து கழகத் தலைவர் விசா ம.சண்முகம் தலைமை தாங்கினார். செயலாளர் என்.அருண் வரவேற்றார்.

போட்டியை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தொடங்கி வைத்தார். செப்டம்பர் 2-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இப்போட்டியானது ஒற்றையர் ஆண்கள், ஒற்றையர் பெண்கள், இரட்டையர் ஆண்கள், இரட்டையர் பெண்கள், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது.

முதல் நாள் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில் வெற்றிபெறுவோருக்கு ரூ.3 லட்சம் மற்றும் கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் சிறந்த வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.4 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது. பரிசு, சான்றிதழ் மற்றும் கோப்பையை மாவட்ட கலெக்டர் அன்பழகன் வழங்க உள்ளார்.

Next Story