பெண் அதிகாரியிடம் 10 பவுன் நகையை பறித்த விசைத்தறி தொழிலாளி கைது

திருச்செங்கோட்டில் நடந்து சென்ற பெண் அதிகாரியிடம் 10 பவுன் நகையை பறித்த விசைத்தறி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
திருச்செங்கோடு,
திருச்செங்கோடு தொண்டிகரடு பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை (வயது 52). அரசு விவசாயத்துறை அதிகாரியான இவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இரவு நேரத்தில் தொண்டிகரடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மணிமேகலை கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு சென்று விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திருச்செங்கோடு கூட்டப்பள்ளி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகம் அளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கம் (26) என்பதும், திருச்செங்கோடு ஜீவா நகரில் விசைத்தறி கூடத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும், பெண் அதிகாரியிடம் 10 பவுன் தாலிக்கொடியை பறித்து சென்றவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மாணிக்கத்தை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 10 பவுன் நகையை மீட்டு அவர் வைத்திருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த நகை பறிப்பு சம்பவத்துக்கு வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

Related Tags :
Next Story