ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Aug 2018 10:30 PM GMT (Updated: 30 Aug 2018 7:08 PM GMT)

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரம்பலூர்,

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவரும், ஜியோ ஒருங்கிணைப்பாளருமான தயாளன், தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவரும், ஜாக்டோ ஒருங்கிணைப்பாளருமான ராமர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளரும், ஜாக்டோ ஒருங்கிணைப்பாளருமான அருள்ஜோதி ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் துரைசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குமரி அனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக முதல்வரை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முடிவில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.

Next Story