திருச்சிக்கு 4 கண்டெய்னர் லாரிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்தன
கர்நாடக மாநிலத்தில் இருந்து திருச்சிக்கு 4 கண்டெய்னர் லாரிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்தன.
திருச்சி,
மிகப்பெரிய வளர்ந்த நாடுகளில் கூட இன்னும் தேர்தலுக்கு வாக்குச்சீட்டு முறையே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் மட்டுமே நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்களிக்கும் நடைமுறை பல ஆண்டுகளாக உள்ளது. இதனால், எளிதாக வாக்களிக்கவும், வாக்கு எண்ணிக்கையை விரைவாக முடிக்கவும் முடியும்.
இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும், ஐதராபாத்தில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனமும் தயாரிக்கின்றன. இது வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம் என்ற இருபகுதிகளை கொண்டதாகும். வாக்குப்பதிவின்போது தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில்தான் இந்த எந்திரம் இருக்கும். அவர், ‘பீப்’ என்ற ஒலியுடன் சமிக்ஞை கொடுத்தால்தான் வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்ய முடியும். ஒரு மின்னணு கட்டுப்பாட்டு எந்திரத்தில் 16 வேட்பாளர்கள் வீதம் கொண்ட 4 வாக்குப்பதிவு எந்திரங்களை பொருத்த முடியும். அந்த வகையில் 64 வேட்பாளர்களுக்கு ஒரு கட்டுப்பாட்டு எந்திரம் பயன்படுத்தலாம்.
எந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை குறைந்தது 10 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். ஏனென்றால், மின்னணு எந்திரத்தில் உள்ள பேட்டரியை அகற்றி விட்டால்கூட, எந்திரத்தில் பதிவான வாக்குகள் அதன் நினைவகத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். ஒரு மாநிலத்தில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரத்தை மற்ற மாநிலங்களில் நடக்கும் தேர்தலுக்கு அதன் பதிவை அழித்து விட்டு பயன்படுத்த முடியும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிந்தது. அடுத்த கட்டமாக இந்தியா முழுவதும் அடுத்த ஆண்டு(2019) மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலுக்கு அரசியல்வாதிகள் ஆயத்தமாகும் முன்பே, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள பழைய பதிவுகள் மற்றும் பழுது சரிபார்க்கப்பட்டு அவை பாதுகாப்பாக வைக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தும் வகையில், நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 4 கண்டெய்னர் லாரிகள் மூலம் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள் வந்தன.
லாரிக்கு தலா 860 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வீதம் 4 கண்டெய்னர் லாரிகளிலும் மொத்தம் 3,440 எந்திரங்கள் வந்தன. ஒவ்வொரு லாரியின் பின்பக்க கதவுகளும் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டிருந்தன. வருவாய்த்துறை மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் முன்பு சீல் உடைக்கப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டன. விரைவில், கலெக்டர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திறக்கப்பட்டு மீண்டும் சரிபார்க்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story