தரமற்ற மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்படுகிறதா? விசாரணை கமிஷன் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்
அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை கமிஷன் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
திருச்சி,
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்ற பயன்படும் கருவி சேதம் அடைந்து நோயாளிகளின் உடலுக்குள் புகுந்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படுவதாக கூறப்படுவது குறித்து விசாரிக்கப்படும். அப்படி தரமற்ற மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தினால் விசாரணை கமிஷன் அமைத்து, தவறு இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் பிறநாடுகளிலும், பிறமாநிலங்களிலும் பின்பற்றக்கூடிய வகையில் ‘தமிழ்நாடு மெடிக்கல் சிவில் கார்ப்பரேஷன்’ என்ற குளோபல் டெண்டர் மூலம் ஆன்லைனில் சர்வதேச தரத்துடன் வாங்கப்படுகிறது. இருப்பினும் இதுபோன்ற புகார்கள் குறித்து விசாரிக்கப்படும்.
108 ஆம்புலன்ஸ் சேவையை பொறுத்தவரை தமிழகம் முழுவதும் 930 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. நோயாளிகள் அழைப்பு கிடைத்த உடன் 10 நிமிடங்களுக்கு குறைவாக ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்க வேண்டும் என்பது தான் இலக்கு. உலக அளவில் ஆம்புலன்ஸ் சேவையின் சராசரி 8 நிமிடங்களாக உள்ளது. இந்த ஆண்டு 8.3 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் சேவையை வழங்கியுள்ளோம். இதற்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியதே காரணம். விரைவில் தமிழகத்தில் ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்தி, மேலும் பல நவீன தொழில்நுட்பங்கள் பயன் படுத்தப்படும்.
மருத்துவர்கள் ஊதிய உயர்வுகோரி நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக 4-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. தமிழக அரசு மருத்துவர்களுடன் இணக்கமான உறவை பின்பற்றி வருகிறது. அரசு மருத்து வமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதை தற்போதைக்கு தடுக்க முடியாது. தமிழகத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் சாத்தியமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story