கரூரில் நடமாடும் தபால் துறை வங்கி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
கரூரில் நடமாடும் தபால் துறை வங்கியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
கரூர்,
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் என்கிற நடமாடும் தபால் துறை வங்கியை புதுடெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவில் உள்ள 650 மாவட்டங்களில் அந்தந்த தலைமை அஞ்சல் அலுவலகத்தில் குறைந்த பட்சம் ஒரு நடமாடும் தபால் துறை வங்கி கிளை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி கரூர் கோட்டத்தில் நடமாடும் தபால் துறை வங்கி, கரூர் தலைமை தபால் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கரூர் நடமாடும் தபால் துறை வங்கியை கரூர் ஜி.ஆர். திருமண மண்டபத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் அன்பழகன், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூர் அஞ்சல் துறை முதன்மை மேலாளர் பிரபு வரவேற்றார்.
விழாவில் கலந்து கொண்ட திருச்சி மண்டல மேலாளர் தாமஸ்லூர்துராஜ் கூறியதாவது:-
நடமாடும் தபால் துறை வங்கி முழுமையாக மத்திய அரசாங்கத்தால் இயக்கப்படுகிறது. நெப்ட், ஆர்.டி.ஜி.எஸ். அண்டு ஐ.எம்.பி.எஸ்., மொபைல் ரீசார்ஜ், லேண்ட்லைன் போன் கட்டணம், மின் கட்டணம், ஆயுள் காப்பீட்டு பிரிமியம், வங்கி பணபரிவர்த்தனை மற்றும் மத்திய - மாநில அரசுகளின் மானியங்கள், ஓய்வூதியங்கள் போன்றவற்றையும் பெற முடியும். சாதாரண அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்குகளில் கிடைக்காத மேற்கண்ட வசதிகள் நடமாடும் தபால் துறை வங்கியால் வழங்கப்படுகின்றன. இந்த வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்க விண்ணப்பங்கள், கையெழுத்துகள் எதுவும் தேவையில்லை. கைரேகை மட்டும் எடுத்து கொள்ளப்படும். குறைந்த பட்ச இருப்புத்தொகை தேவை இல்லை. நடப்பு கணக்குகள் ரூ.1,000 குறைந்தபட்ச இருப்புடன் நடமாடும் தபால் துறை வங்கியில் தொடங்கலாம். நடமாடும் தபால் துறை வங்கி சேமிப்பு கணக்குகளில் ரூ.1 லட்சம் வரை அதிகபட்சமாக வைத்திருக்க முடியும்.
அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்குகள் மற்றும் நடமாடும் தபால் துறை வங்கி கணக்குகள் இரண்டையும் இணைத்து கொள்ளலாம். நடமாடும் தபால் துறை வங்கி சேவைகளை வாடிக்கையாளர்கள் தங்களின் வீடுகளில் இருந்தே தபால்காரர்கள் மூலமாக குறைந்த கட்டணத்தில் பெறலாம். சேமிப்பு கணக்குகளுக்கு 4 சதவீத வட்டி வழங்கப்படும். கரூர் நடமாடும் தபால் துறை வங்கி கிளையை தவிர பசுபதிபாளையம் துணை தபால் அலுவலகம், எஸ். வெள்ளாளப்பட்டி, பஞ்சமாதேவி மற்றும் ரெங்கநாதம்பேட்டை கிளை அஞ்சலகங்கள் நேற்று முதல் தொடங் கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான அஞ்சல் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story