சிறுநீரகத்தை பாதிக்கும் ‘மாசு’


சிறுநீரகத்தை பாதிக்கும் ‘மாசு’
x
தினத்தந்தி 2 Sept 2018 5:12 PM IST (Updated: 2 Sept 2018 5:12 PM IST)
t-max-icont-min-icon

மாசுபட்ட காற்றை சுவாசிக்கும்போது அதில் கலந்திருக்கும் நச்சுகள் சிறுநீரகங்களுக்கு நேரடியாக தீங்கு விளைவிக்கிறது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மிச்சிகன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘‘பெரும்பாலானோர் காற்று மாசுபாடு பிரச்சினையை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள்.

அவை கண்ணுக்கு தெரியாத மாசுகளாக இருப்பதால் கவனத்தில் கொள்வதில்லை. மாசு நிறைந்த பகுதிகளில் பயணம் செய்யும்போது முகத்தை மூடிக்கொண்டு செல்வது அவசியமானது. அதிலும் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கும் நச்சுகள் ரத்தத்தில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தும்.

சிறுநீரகங்களின் செயல்பாடுகள் அவைகளை சென்றடையும் ரத்த ஓட்டத்தை மையப்படுத்தியே நடந்து கொண்டிருக்கின்றன. இந்த ரத்த ஓட்ட சுழற்சி அமைப்பில் மாசுக் களால் பாதிப்பு ஏற்பட்டு அது சிறுநீரகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. நீரிழிவு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பிரச்சினைகளும் நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்பட காரணமாகின்றன’’ என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.

உலகளவில் காற்று மாசுபாடு அதிகம் சூழ்ந்துள்ள நகரங்களின் பட்டியலில் டெல்லி, கான்பூர், பாட்னா, லக்னோ, ஆக்ரா, ஸ்ரீநகர், ஜெய்ப்பூர், பரிதாபாத், கயா, முசாபர்பூர், பாட்டியாலா, ஜோத்பூர், வாரணாசி, குர்ககான் ஆகிய 14 இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. காற்று மாசுபாடு பிரச்சினையால் ஆண்டுதோறும் 40 லட்சம் பேர் மரணம் அடைவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story