டென்னிஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர், கலெக்டர் பாராட்டு
ஏற்காட்டில் மாநில அளவிலான இந்திய கவுன்சில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
ராமநாதபுரம்,
மாநில அளவிலான இந்திய கவுன்சில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் ஏற்காட்டில் நடைபெற்றன. இந்த போட்டியில் ராமநாதபுரம் நேசனல் அகாடமி பள்ளி மாணவர் நந்தகிஷோர் டென்னிஸ் ஒற்றையர் இளங்காளையர் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் மாணவன் நந்தகிஷோர் கர்நாடகாவில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளார். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற அகில இந்திய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவன் நந்தகிஷோரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் பாராட்டினார். அப்போது பயிற்சியாளர்கள் சோமசுந்தரம், ஜானி ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story