கல்லணைக்கால்வாயில் மாயமான சிறுவன் பிணமாக மீட்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
பூதலூர் கல்லணைக்கால்வாயில் மாயமான சிறுவன் பிணமாக மீட்கப்பட்டான். முன்னதாக சிறுவனை மீட்கக்கோரி அவனுடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருக்காட்டுப்பள்ளி,
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள வில்வராயன்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் சிவாஜி (வயது11). இவன் பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் சிவாஜி, அவனுடைய அண்ணன் சிவா(14) மற்றும் சிலர் பூதலூர் கல்லணைக்கால்வாயில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது சிவாஜி கால்வாயில் மூழ்கி மாயமானான்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்று கால்வாயில் இறங்கி சிவாஜியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு வெகு நேரமாகியும் சிவாஜி கிடைக்கவில்லை. இதனால் தேடும் பணி கைவிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை சிவாஜியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சிவாஜியை உடனடியாக மீட்கக்கோரி பூதலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கல்லணைக்கால்வாயில் தண்ணீரை நிறுத்தி சிவாஜியை மீட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பூதலூர் போலீசார் அங்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக திருக்காட்டுப்பள்ளி-செங்கிப்பட்டி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிவாஜியின் உறவினர்கள் கல்லணைக்கால்வாய் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆற்றில் மூழ்கி சிவாஜி பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. தஞ்சை மானோஜிப்பட்டியில் உள்ள கல்லணைக்கால்வாயில் அவனுடைய பிணம் மீட்கப்பட்டது.
ஆற்றில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் பூதலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story