குடிநீரில் விஷம் கலந்து விடுவதாக மிரட்டிய விவசாயி கைது


குடிநீரில் விஷம் கலந்து விடுவதாக மிரட்டிய விவசாயி கைது
x
தினத்தந்தி 3 Sept 2018 3:45 AM IST (Updated: 3 Sept 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை அருகே குடிநீரில் விஷம் கலந்து விடுவதாக மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே எட்டு புளிக்காடு ஊராட்சியில் 4 மேல்நிலை குடிநீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. சம்பவத்தன்று அங்கு உள்ள குடிநீர் தொட்டி ஒன்றில் அதே ஊரை சேர்ந்த விவசாயி காசிநாதன் (வயது47) என்பவர் ஏறி நின்று கொண்டிருந்தார்.

இதை பார்த்த மேல்நிலை குடிநீர் தொட்டியின் ஆபரேட்டர் மாரியாயி (50) என்பவர், காசிநாதனை கீழே இறங்கும்படி கூறினார். அப்போது காசிநாதன், குடிநீரில் பூச்சி மருந்தை (விஷம்) கலந்து விடுவேன் என கூறி உள்ளார். மேலும் மாரியாயிடம் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தார்.

இதுபற்றி மாரியாயி பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசிநாதனை கைது செய்தனர்.

விவசாயி ஒருவர் குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து விடுவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story