கிடப்பில் போடப்பட்டுள்ள மேம்பால பணியை தொடங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
சிங்கபெருமாள்கோவிலில் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள ரெயில்வே மேம்பால பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு,
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கல்பட்டில் சிங்கபெருமாள்கோவில் கூட்டுசாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், இங்கு எந்த நேரமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் எப்போதும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இந்த பகுதியில் போக்குவரத்து சிக்னல் இல்லை. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பல வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டு, சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சுற்றி கொண்டு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வாகனங்கள் மல்ரோசாபுரம் வழியாக செங்கல்பட்டுக்கும், செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு செல்லும் வாகனங்கள் அதே மல்ரோசாபுரம் கூட்ரோடு வரை சென்று விட்டு ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம், திருவள்ளூருக்கும் செல்ல வேண்டும்.
மேலும் சிங்கபெருமாள் கோவிலில் உள்ள சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் உள்ளன. வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. இந்த வழியையும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ரூ.22 கோடியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும்பணி தொடங்கியது. ஆனால் அந்த பணி பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள மேம்பாலப்பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிடப்பில் போடப்பட்ட மேம்பால பணியினை தொடங்கக்கோரி பா.ம.க. சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிங்கபெருமாள்கோவிலில் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story