மாநில அளவிலான இறகுபந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கலெக்டர் வழங்கினார்
கரூரில் நடந்த மாநில அளவிலான இறகுபந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் பரிசு வழங்கி பாராட்டினார்.
கரூர்,
கரூர் மாவட்ட இறகுப்பந்து கழகம் மற்றும் கரூர் வைஸ்யா வங்கி, காகித ஆலை நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் கரூரில் மாநில அளவிலான இறகுபந்து போட்டி கரூர் ஆபீசர்ஸ் கிளப்பில் கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இந்த போட்டியானது ஒற்றையர் ஆண்கள், ஒற்றையர் பெண்கள், இரட்டையர் ஆண்கள், இரட்டையர் பெண்கள், கலப்பு இரட்டையர் ஆகிய 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் 32 மாவட்டங்களில் இருந்து 550 வீரர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இதில் லீக் போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் சிறப்பிடம் பெற்ற வீரர்- வீராங்கனைகள் அரையிறுக்கு முன்னேறினர். நேற்று அந்த 5 பிரிவுகளிலும் இறுதி போட்டிகள் நடந்தன.
இதில் கலப்பு இரட்டையர் போட்டியில் கோவை லோகேஷ் விசுவநாதன், காஞ்சிபுரம் தனுஸ்ரீ ஜோடி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். திருவள்ளூரை சேர்ந்த செந்தில்வேல், சென்னையை சேர்ந்த நிலா ஆகிய ஜோடி 2-ம் இடம் பிடித்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கோவை சதீஸ்குமார் முதலிடமும், சென்னையை சேர்ந்த சங்கர் முத்துசாமி 2-ம் இடமும் பெற்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் சென்னையை சேர்ந்த லட்சுமி பிரியங்கா முதலிடமும், மதுரையை சேர்ந்த ஜெர்லின்அனிகா 2-ம் இடமும் பெற்றனர். ஆண்களுக்கான இரட்டையர் போட்டியில் கோவையை சேர்ந்த லோகேஷ் விசுவநாதன், நவீன் ஜோடி முதலிடம் பெற்றது. காஞ்சிபுரம் அர்ஜூன்கிருஷ்ணன், சென்னையை சேர்ந்த வேலவன் ஜோடி 2-ம் இடம் பிடித்தது.
பெண்களுக்கான இரட்டையர் போட்டியில் சென்னையை சேர்ந்த வர்ஷினி, நிலா ஜோடி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. காஞ்சிபுரம் தனுஸ்ரீ, சென்னை ரம்யா துளசி ஜோடி 2-ம் இடம் பெற்றது. மாநில அளவிலான இறகு பந்து போட்டியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு, மாவட்ட கலெக்டர் அன்பழகன் கோப்பை மற்றும் சான்றிதழ்கள், பரிசுத்தொகைகளை வழங்கி வாழ்த்து கூறி பாராட்டினார். ரூ.3 லட்சம் வரை பரிசுத்தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட இறகு பந்து கழக தலைவர் விசா ம.சண்முகம், செயலாளர் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story