வேலூரில் இன்று நடக்கிறது: அ.தி.மு.க.சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்


வேலூரில் இன்று நடக்கிறது: அ.தி.மு.க.சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 3 Sept 2018 5:00 AM IST (Updated: 3 Sept 2018 4:16 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் இன்று, அ.தி.மு.க.சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

வேலூர்,

தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் அ.தி.மு.க.அரசின் சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டங்கள், சைக்கிள் பேரணிகள் உள்பட நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதன்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேலூர் மாங்காய் மண்டி அருகில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

பொதுக்கூட்டத்துக்கு அ.தி.மு.க.மேற்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமை தாங்குகிறார். வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. வரவேற்கிறார்.

இதில், சிறப்பு அழைப்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி பேசுகிறார். அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மின்சாரம், ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி வாழ்த்தி பேசுகிறார்.

மேலும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், எம்.பி.க்கள் கோ.அரி, ஆர்.வனரோஜா, லோகநாதன் எம்.எல்.ஏ. உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பேசுகின்றனர்.

பொதுக்கூட்டத்தை முன்னிட்டு மாங்காய் மண்டி அருகே பிரமாண்டமான மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை பார்வையிடுவதற்காக அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று மாங்காய் மண்டி பகுதிக்கு வந்தார். அவர் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார். அவருடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

பொதுக்கூட்டத்தை முன்னிட்டு வேலூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநகரத்தின் முக்கிய பகுதிகளில் அ.தி.மு.க. கொடிகளும், வரவேற்பு பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் கட்-அவுட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. பொதுக்கூட்ட மேடை மற்றும் திடலில் அலங்கார மின்விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, கிளைக்கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர். மேலும் அ.தி.மு.க.தொண்டர்கள் வரும் வாகனங்களை நிறுத்தி வைக்கவும் இட வசதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Next Story