திசையன்விளையில் போக்சோ சட்டத்தில் 16 பேர் கைது


திசையன்விளையில் போக்சோ சட்டத்தில் 16 பேர் கைது
x
தினத்தந்தி 3 Sept 2018 5:21 AM IST (Updated: 3 Sept 2018 5:21 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளையில் போக்சோ சட்டத்தில் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

திசையன்விளை,

திசையன்விளையில் போக்சோ சட்டத்தில் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:–

தகராறு

நெல்லை மாவட்டம் திசையன்விளை செல்வமருதூரில் 17 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும், பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண்ணின் கையை, அந்த நபர் பிடித்து இழுத்துள்ளார். இதனை அந்த பெண்ணின் தாயார் தட்டிக் கேட்டுள்ளார். இதுதொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதல் உருவானது. இதில் இருதரப்பினரும் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக திசையன்விளை போலீசில் இருதரப்பினரும் தனித்தனியே புகார் செய்தனர்.

16 பேர் கைது

புகாரின் பேரில் இருதரப்பையும் சேர்ந்த கோயில் பிச்சை (62), நல்லம்மாள் (57), ஜானகி (42), இந்திரா (25), சுதா (31), தமிழரசி (38), சூரிய கலா (29), முத்துவேல் (33), முத்துகுமார் (36), ராஜன் (39), வள்ளித்தாய் (36), தயா மணி (63), சுமதி (40), வசந்தி (32), வனிதா (30) உள்ளிட்ட 18 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிவு செய்தார். அவர்களில் 16 பேரை போலீசார் கைது செய்தனர். சூரியகலா, வனிதா ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story