கும்மிடிப்பூண்டியில் அரசு பஸ் மோதி வாலிபர் பலி


கும்மிடிப்பூண்டியில் அரசு பஸ் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 4 Sept 2018 3:15 AM IST (Updated: 4 Sept 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டியில், மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதி, வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

கும்மிடிப்பூண்டி,

பொன்னேரி என்.ஜி.ஓ. நகரைச்சேர்ந்தவர் ஜெகன்நாதன். இவருடைய மகன் வசந்தகுமார்(வயது 19). இவர், பொன்னேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வெல்டராக வேலை செய்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் வசந்தகுமார், புதியதாக மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கினார். நேற்று முன்தினம் வசந்தகுமார், கும்மிடிப்பூண்டி பஜாரையொட்டி அருள் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு தனது புதிய மோட்டார்சைக்கிளில் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.

கும்மிடிப்பூண்டி பஜாரில் ரெட்டம்பேடு சாலை சந்திப்பின் அருகே வரும்போது, அதே திசையில் செங்குன்றம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக வசந்தகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த வசந்தகுமார், சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story