தொழிலாளியை கொலை செய்த அண்ணன்
பண்ருட்டி அருகே உருட்டு கட்டையால் அடித்து தொழிலாளியை கொலை செய்த அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே கீழகுப்பம் காலனியை சேர்ந்தவர் ராஜவேல். இவருடைய மகன் வீரமுத்து (வயது 45). தொழிலாளி. இவருடைய மனைவி பழனியம்மாள். குடும்ப பிரச்சினை காரணமாக வீரமுத்துவை பிரிந்து பழனியம்மாள் சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று வீரமுத்து, தன்னுடைய அண்ணன் சக்திவேலிடம்(50) என்னுடைய மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறி அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதில் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சக்திவேல் கீழே கிடந்த உருட்டு கட்டையை எடுத்து வீரமுத்துவை சரமாரியாக தாக்கினார். இதில் வீரமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக்திவேலை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story