மாவட்ட செய்திகள்

போயர் சமூகத்தின் அனைத்து உட்பிரிவுகளையும் பட்டியலிடப்பட்ட பழங்குடியின மக்களாக அறிவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் + "||" + Demonstrate the Boer community to declare all the subdivisions of the community as declared tribes

போயர் சமூகத்தின் அனைத்து உட்பிரிவுகளையும் பட்டியலிடப்பட்ட பழங்குடியின மக்களாக அறிவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

போயர் சமூகத்தின் அனைத்து உட்பிரிவுகளையும் பட்டியலிடப்பட்ட பழங்குடியின மக்களாக அறிவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
போயர் சமூகத்தின் அனைத்து உட்பிரிவுகளையும் பட்டியலிடப்பட்ட பழங்குடியின மக்களாக அறிவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்,

தமிழ்நாடு வீரபோயர் இளைஞர் பேரவை சார்பில், தமிழகம் முழுவதும் வசிக்கும் போயர் சமூகத்தின் அனைத்து உட்பிரிவுகளையும் பட்டியலிடப்பட்ட பழங்குடியின மக்களாக (டி.என்.டி.) அறிவிக்கவேண்டும். தமிழக அரசாணை எண் 1310-1979 ஐ ரத்து செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் போயர் சமூக கூட்டுறவு சங்கங்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு வழங்கவேண்டும் போன்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.


பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் சிவசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் வக்கீல் அருள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மாநில பொருளாளர் பாலச்சந்தர், துணைத்தலைவர் ராஜேஷ்குமார், மாநில கொள்கை பரப்பு செயலாளர் இளையராஜா, செயலாளர் முருகேசன், மாநில மருத்துவ அணி தலைவர் டாக்டர் ரமேஷ் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். இதில் மாவட்ட கவுரவத்தலைவர் கணேசன், அமைப்பாளர் செல்வம், துணை அமைப்பாளர் செல்வராஜ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் என்ஜினீயர் சின்னதம்பி, நகரத்தலைவர் கண்ணன், நகர செயலாளர் சின்னராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.