நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம்


நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 5 Sept 2018 3:30 AM IST (Updated: 4 Sept 2018 6:11 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் நேற்று சாமி தரிசனம் செய்தார்.

நெல்லை,

நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் நேற்று சாமி தரிசனம் செய்தார்.

‘மாரி–2‘

நடிகர் தனுஷ்–காஜல் அகர்வால் நடித்து வெளிவந்த படம் மாரி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் 2–ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு ‘மாரி–2‘ என்று பெயரிட்டு உள்ளனர். இதில் முதல் பாகத்தில் நடித்த தனுஷ் கதாநாயகனாகவும், கதாநாயகியாக சாய் பல்லவியும் நடிக்கிறார்கள்.

‘மாரி–2’ படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தென்காசி பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பில் தனுஷ், சாய் பல்லவி, ரோபோ சங்கர் மற்றும் துணை நடிகர்கள், படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

சாமி தரிசனம்

இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணி அளவில் நடிகர் தனுஷ் மற்றும் துணை நடிகர், நடிகைகள் நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்கு வந்தனர். நேற்று காலை சுவாமி திருப்பள்ளி எழுச்சி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் தனுஷ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளை தரிசனம் செய்தனர்.

பின்னர் கோவில் உள்ளே சுற்றி வந்து பார்வையிட்டனர். வடக்கு பிரகாரத்தில் நின்றிருந்த யானை காந்திமதியிடம் தனுஷ் ஆசி பெற்றார். நெல்லையப்பர் கோவிலுக்கு தனுஷ் வந்ததை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் அவரை காண கோவில் முன்பு திரண்டனர். போலீசார் படக்குழுவினை பாதுகாப்பாக தரிசனம் முடித்து அனுப்பி வைத்தனர்.


Next Story