எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்


எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Sep 2018 10:30 PM GMT (Updated: 4 Sep 2018 7:40 PM GMT)

எல்.ஐ.சி. (ஆயுள் காப்பீடு) முகவர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை,

எல்.ஐ.சி. (ஆயுள் காப்பீடு) முகவர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தின் தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். செயலாளர் தெட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். பாலிசிதாரர்களுக்கு போனசை உயர்த்தி வழங்க வேண்டும். பாலிசி பிரீமியத்தின் மீதான அனைத்து ஜி.எஸ்.டி.-ஐ ரத்து செய்ய வேண்டும். பாலிசிகளை புதுப்பிக்கும் பொருட்டு வழங்கப்பட்டு உள்ள காலத்தை 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். புதிய கமிஷனை முகவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முதன்மை காப்பீடு ஆலோசகர் சுப்பிரமணியன் மற்றும் எல்.ஐ.சி. முகவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் ராஜாராம் நன்றி கூறினார்.

Next Story