நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்


நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 4 Sep 2018 10:45 PM GMT (Updated: 4 Sep 2018 10:29 PM GMT)

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.

நாகர்கோவில்,

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், மருத்துவப்படி ரூ.1000 வழங்க வேண்டும், பொங்கல் பரிசு ரூ.500 வழங்க வேண்டும், புதிய மருத்துவ காப்பீடு திட்ட குறைபாடுகளை களைந்திட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் கனகசபாபதி தலைமை தாங்கினார். பொருளாளர் நல்லபெருமாள் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட இணைச்செயலாளர் லாரன்ஸ் நன்றி கூறினார். மாலை 3.30 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் 6 மணி வரை நடந்தது.


Next Story